மழைக்காலத்தில் ஈசல் தொல்லையா இருக்கா? இதை மட்டும் பண்ணுங்க கிட்டவே வராது!

Easel insect

ஈசல் : மழைக்காலம் தொடங்கிவிட்டது என்றால் நமக்கு வரும் பிரச்சனைகளில் ஈசல் பூச்சியும் ஒன்று கூட சொல்லலாம். ஒரு சில வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஈசல் பூச்சிகளுடன் விளையாடினாள் கூட ஒரு சிலருக்கு தலைவலியே வந்துவிடும்.

மழைபெய்து நின்ற பிறகு நம்மளுடைய வீட்டின் லைட்டுகளை பார்த்து கூட்டமாக பறந்து கொண்டு இருக்கும். இதனால் நாம் நமக்கு இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டு ஈசல் துரத்துவதையும் ஒரு வேலையாக பார்த்து கொண்டு இருப்போம். ஆனால், இனிமேல் அதனை துரத்தவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்லும் சில டிப்ஸ்களை பலோவ் செய்து பாருங்கள் ஈசல் ஓடிவிடும்.

டிப்ஸ் : 

1. எலுமிச்சை, பேக்கிங் சோடா இரண்டையும்  தண்ணீரில் சேர்த்து நன்றாக குலுக்கி ஒரு பாட்டலில் வைத்து கொண்டு ஈசல் கூட்டமாக இருக்கும் இடத்தில் தெளித்தால் போதும் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து ஈசல் கூட்டமே ஓடி விடும்.

2. விளக்குகளுக்கு அருகில் எண்ணெய் இல்லாத செய்தித்தாள்களை வைத்தாலும் ஈசல் பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும்.

3.வேப்ப எண்ணெய் பூச்சிகளை விரட்டவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வீட்டிற்குள் பூச்சிகள் வராமல் இருக்க வேப்ப எண்ணெய்யை தெளிக்கலாம்.

4. பொதுவாகவே இந்த பூச்சிகள் வெளிச்சத்தை பார்த்து தான் வரும். எனவே, ஜன்னல்களில் இருந்து வரும் வெளிச்சத்தில் பூச்சிகளும் வீட்டிற்குள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவுக்கு ஜன்னல்களை பூட்டி கொள்ளுங்கள். ஜன்னல்களில் கருப்புத் திரைகளை வைத்து பூட்டிக்கொண்டாள் இன்னுமே நல்லது..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்