இந்த நான்கு பொருள்கள் இருந்தா போதும்.. ரவா கேக் வீட்டிலேயே செய்யலாம்..!
குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
சென்னை :குறைவான பொருட்களை வைத்து வீட்டிலேயே ரவா கேக் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்..
தேவையான பொருள்கள்;
- ரவை =ஒன்றை கப்
- சர்க்கரை= முக்கால் கப்
- பால் =அரைக்கப்
- பேக்கிங் சோடா= அரை ஸ்பூன்.
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து ,அதனுடன் முக்கால் கப் சர்க்கரையை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து எடுத்து வைத்துள்ள பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். ஓரளவுக்கு கெட்டி பதத்திற்கு வந்தவுடன் மற்றொரு கிண்ணம் அல்லது ட்ரேயில் லேசாக நெய் தடவி கலந்து வைத்துள்ள ரவையை சேர்த்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதன் மேல் ஸ்டாண்ட் வைத்து ஐந்து நிமிடம் சூடாக்கி கொள்ளவும்.
பிறகு நாம் சேர்த்து வைத்துள்ள ரவை கிண்ணத்தை அந்த ஸ்டாண்ட் மீது வைத்து மூடி 45 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து விடவும். மற்றொருபுரத்தில் சுகர் சிரப் தயார் செய்து வைத்துக் கொள்ளவும் .கால் கப் சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். இப்போது 45 நிமிடம் கழித்து கேக்கை வெளியில் எடுத்து மற்றொரு கிண்ணத்திற்கு மாற்றி உங்களுக்கு பிடித்த வடிவில் லேசாக கத்தியால் கீறிக் கொள்ளவும் .பிறகு நாம் செய்து வைத்துள்ள சுகர் சிரப்பை ஊற்றினால் சுவையான ஸ்பான்ச்சான ரவா கேக் தயார்.