முட்டைக்கோஸ் மலை மாவட்டங்களில் அதிகமாக விளையக்கூடிய இலை காய்கறி ஆகும். முட்டைக்கோசை நாம் பொரியல், கூட்டு, சாம்பார் என செய்து சாப்பிட்டிருப்போம். அதில் உள்ள ஒருவகையான ஸ்மெல் சிலருக்கு பிடிக்காது குறிப்பாக குழந்தைகளுக்கு. ஆனால் இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் நாம் முட்டைக்கோஸ் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்ப்போம்..
தேவையான பொருள்கள் :
முட்டைக்கோஸ்= 1/4 கிலோ
மிளகுத்தூள் =1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் =2 ஸ்பூன்
கரம் மசாலா=1 ஸ்பூன்
சோள மாவு =5 ஸ்பூன்
மைதா=3 ஸ்பூன்
பூண்டு=5 பள்ளு
பச்சை மிளகாய் =2
சோயா சாஸ் =1 ஸ்பூன்
ரெட் சில்லி சாஸ் =1 ஸ்பூன்
தக்காளி சாஸ் = ஒரு ஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் =2
பெரிய வெங்காயம்=2
இஞ்சி பூண்டு பேஸ்ட்=1/2 ஸ்பூன்
செய்முறை:
முட்டைக்கோஸ் ஐ சிறிது சிறிதாக துருவி அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு துருவிய முட்டைக்கோஸில் மிளகுத்தூள்,கரம் மசாலா, மிளகாய்த்தூள், சோள மாவு, மைதா அல்லது அரிசி மாவு,இஞ்சி பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.அதை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதிலே பூண்டு பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் குடை மிளகாய், ஸ்பிரிங் ஆனியன், சோயா சாஸ், தக்காளி சாஸ், சிகப்பு மிளகாய் சாஸ் மற்றும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியவுடன் ஒரு ஸ்பூன் சோளமாவை தண்ணீரில் கலக்கி அதிலே ஊற்றவும், ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளவும். மீண்டும் ஒருமுறை வதக்கி மூன்று நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுத்த முட்டைக்கோஸ் உருண்டைகளை அதிலே சேர்த்து கலந்து விடவும். இப்போது சுவையான கம கமவெனா முட்டைக்கோஸ் மஞ்சூரியன் ரெடி.
முட்டைக்கோஸில் உள்ள சத்துக்கள் :
விட்டமின் ஏ விட்டமின் சி ஆன்ட்டி ஆக்சிடென்ட் விட்டமின் பி6 விட்டமின் கே பொட்டாசியம் மெக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது.
நன்மைகள்:
முட்டைக்கோஸ் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றுகிறது மற்றும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.
நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் முட்டைக்கோசை எடுத்துக் கொள்ளலாம். இது குறைவான கலோரிகளை கொண்டுள்ளது.
விட்டமின் சி அதிகம் உள்ளதால் முகச்சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும் முகத்திற்கு ஒரு நல்ல பொழிவை கொடுக்கும். முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் நாம் தடவி வந்தால் முதுமையை தள்ளிப் போடலாம்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். பீட்டா கரோட்டின் இதில் இருப்பதால் கண் பார்வைத் திறனை மேம்படுத்தும்.
முட்டைக்கோஸ் வகைகளை நாம் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் காணப்படுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
புற்றுநோய் செல்களை தடுக்கும் தன்மையும் கொண்டுள்ளது. மூளையில் ஏற்படும் அல்சைமர் கட்டிகளை உருவாகாமல் தடுக்கும்.
இதில் குலுட்டமின் அதிகம் உள்ளதால் அல்சர் உள்ளவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் குணமாகும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
நம் இதை எண்ணெயில் பொரித்து எடுத்திருப்பதால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தவிர்க்கவும். இதைத் தவிர வேறு வகையில் முட்டைக்கோசை எடுத்துக் கொள்ளலாம் கூட்டாகவும் பொறியலாகவோ சேர்த்துக் கொள்ளலாம். வாயு பிரச்சனை உள்ளவர்கள் முட்டைக்கோசை மிகக் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது.
முட்டைக்கோஸ் மட்டுமல்லாமல் வேறு எந்த வகையான காய்கறிகளை தவிர்க்கிறார்களோ அதை நாம் இவ்வாறு வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் மேலும் அதில் உள்ள சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…