உலக அளவில் அசைவ விரும்பிகளில் கண் முதலிடம் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அதில் சுவை இருப்பதால்தான் அனைவரையும் ஈர்க்கிறது. சிக்கன் குழம்பு சிக்கன் 65 சிக்கன் கிரேவி சிக்கன் சுக்கா என பல வகையில் சமைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் இன்று சிக்கன் கிரேவியை ஒரு புதுமையான சுவையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் 250 கிராம்
சீரகம்= ஒரு ஸ்பூன்
மிளகு= ஒரு ஸ்பூன்
பட்டை= இரண்டு
மல்லி =ஒரு ஸ்பூன்
வர மிளகாய்= நான்கு
இஞ்சி பூண்டு பேஸ்ட் =1ஸ்பூன்
செய்முறை:
சிக்கனை கழுவி எடுத்து அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ,மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் ,மல்லித்தூள்ஒரு ஸ்பூன் , இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்1 ஸ்பூன் , புளிக்காத தயிர் ஒரு ஸ்பூன் ,லெமன் ஜூஸ் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் சோம்பு ,சீரகம்1 ஸ்பூன் , ஒரு ஸ்பூன் மிளகு, ரெண்டு பட்டை சேர்த்து வறுத்து அதை அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதிலே சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும் அதே எண்ணெயில் ஒரு ஸ்பூன் சோம்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதை அதில் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். கொதித்த பிறகு வறுத்த சிக்கனை அதிலே போட்டு ஐந்து நிமிடம் கிளறி கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்போது சுவையான கம கம சிக்கன் கிரேவி ரெடி.
சத்துக்கள் :
சிக்கனில் அதிக அளவு புரோட்டின், கால்சியம், விட்டமின் பி12, செலினியம், பாஸ்பேட் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதேபோல் கொழுப்பும் அதிகம் உள்ளது.
சிக்கனில் அதிகம் புரோட்டின் உள்ளது இது எலும்புகளுக்கும் தசைகளுக்கு தசைகள் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இதில் உள்ள செலினியம் மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
கோலின் என்ற சத்து ஒரு சில உணவுப் பொருட்களில் மட்டுமே இருக்கும் அந்த வகையில் சிக்கனில் உள்ளது அதேபோல் விட்டமின் பி12 என்ற சத்து அசைவ உணவுகளில் மட்டுமே அதிகம் காணப்படும்.
தவிர்க்க வேண்டியவர்கள்:
இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஒருவேளை சாப்பிட வேண்டும் என்ற நிலை வந்தால் மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும். எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளாமல் அவித்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து எடுத்துக் கொண்டால் நல்லது.
கர்ப்பிணி பெண்கள் முதல் 3 மாதங்கள் தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது உடல் உஷ்ணத்தை ஏற்படுத்தக் கூடியது.
சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளவும். மருந்து வகைகளை உட்கொள்ளும் போது சிக்கனை தவிர்ப்பது கூட நல்ல பலன் தான்.
உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் சிக்கனை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சிக்கனின் கால் பகுதி மற்றும் இறக்கை பகுதிகளில் அதிக கொழுப்பு காணப்படுகிறது இதனை தவிர்க்கவும்.
மார்பு பகுதியில் அதிக அளவு புரதம் உள்ளது . குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நல்ல தசை வளர்ச்சி உண்டாகும். வாரம் ஒரு முறைமட்டுமே சிக்கனை நம் உணவில் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமானதாகும்
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…
சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…