நீங்க இந்த விஷயத்தை எல்லாம் அதிகமாக பண்ணுனா ..இனிமே பண்ணாதீங்க..!

self confidence

தன்னம்பிக்கை -பொதுவாக நாம் ஒரு செயலை அதிகமாக செய்தால் அதன் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுவோம். அப்படி நாம் அதிகமாக செய்யக்கூடாத விஷயங்கள் என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.

அதிக எதிர்பார்ப்பு:

நம்மை மனதளவில் பாதிப்படையச் செய்யும் விஷயங்களை எதிர்பார்ப்பும் ஒன்று. காதலர்கள் ,கணவன் மனைவி, நண்பர்கள் ,உறவினர்கள் என அனைவரும் அனைவரிடமும் எதிர்பார்ப்பை வைப்பதில் தவறில்லை,

ஆனால் அதிகமாக எதிர்பார்ப்பை வைத்துவிட்டு நீங்கள் எதிர்பார்த்ததை போல் இல்லை  என்றால் கோபம் ,சண்டை சச்சரவுகள் ,பிரிவு,மனக்கசப்பு  போன்றவற்றை ஏற்படுத்தும் .  அதனால் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

அதீத நம்பிக்கை:

யாரையும் அதிகமாக  நம்ப கூடாது, இது எல்லாருக்குமே தெரிந்ததுதான். இருந்தாலும் நாம் திரும்பத் திரும்ப நம்புவோம். நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது பேச்சுக்கு தான்  நன்றாக இருக்கும் .

ஒருவரை மனதளவில் காயப்படுத்துவதில் இந்த அதீத நம்பிக்கை தான் முதலிடம் எனலாம்.அது பொருளாதார ரீதியாகவும் ,மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்யும். அதற்காக யாரையும் நம்பாமல் இருப்பதும் பேராபத்து தான்.அதனால்  நம் நம்பிக்கையை அளவோடு வைக்க வேண்டும்.

அதிக யோசனை:

எதைப் பற்றியும் நாம் யோசிப்பது தவறு இல்லை ,யோசித்து செயல்படுவதால் பல வெற்றிகள் கிடைக்கும் .ஆனால் அதிகமாக யோசிக்கும் போது அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

கடந்து போகக்கூடிய விஷயங்களை நாம் கடந்து போக வேண்டும், அதை தவிர்த்து இது ஏன் இப்படி நடந்தது ,இவர்கள் ஏன் இப்படி சொன்னார்கள் என அதையே ஆராய்ந்து யோசித்துக் கொண்டே இருந்தால் நிம்மதியை இழந்து விடுவீர்கள்.

அதிக அன்பு:

யார் மேலயும் அதிகமாக  அன்பு வைக்க கூடாது இது நாம் ஒவ்வொருமுறை அடிபட்ட பிறகும் திரும்பவும் யார் மேலாவது அன்பை செலுத்துவோம் ஏனென்றால் அன்பு செலுத்தாமல் வாழ முடியாது. அந்த அன்பை அளவோடு வைக்க வேண்டும் .

ஏனென்றால் நம்  அன்பு செலுத்தியவர்கள் என்றாவது ஒருநாள் பிரிந்து செல்வார்கள் அந்த நேரத்தில் அதை நம் மனம் ஏற்றுக் கொள்ளாமல் நம் அன்றாட செயல்பாட்டையும்   சிந்தனையையும்  பாதிக்கச் செய்யும்.

ஒரு மனிதன் நடமாடவும் செயல்படவும்  மன தைரியம் மிக முக்கியம் ,அந்த தைரியத்தை இந்த அதிக  அன்பு இழக்கச் செய்துவிடும் .அதனால் அளவோடு அன்பு செய்வோம்.

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்ச” ஆகவே இந்த அதிக எதிர்பார்ப்பு, அதிக நம்பிக்கை, அதிக யோசனை ,அதிக அன்பு இந்த அதிகம் என்பதை  குறைத்துக் கொண்டு அந்த இடத்தில் அளவு என்ற வார்த்தையை வைத்து எதிலும் அளவோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
Dhanush - Nayanthara
Shardul Takur
Rain Update
nayanthara and dhanush
PM Modi - Yogi Adhithyanath
sabarimalai (1)