அரிசி மாவு உப்புமா உதிரி உதிரியா வர இந்த ஸ்டைல்ல செஞ்சு பாருங்க..
சென்னை- அரிசி உப்புமா சுவையாகவும் உதிரி உதிரியாகவும் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
உப்புமா அரைக்க தேவையானவை;
- பச்சரிசி= ஒரு கப்
- துவரம் பருப்பு =கால் கப்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையானவை;
- எண்ணெய் = நான்கு ஸ்பூன்
- நெய்=இரண்டு ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- உளுந்து =அரை ஸ்பூன்
- பெருங்காயம் =கால் ஸ்பூன்
- கருவேப்பிலை= சிறிதளவு
- தேங்காய்= இரண்டு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் =மூன்று.
செய்முறை;
முதலில் அரிசியை கழுவி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் ,உலர்த்திய அரசி மற்றும் பருப்பு ,மிளகு ,சீரகம் ஆகியவற்றை ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வர மிளகாய் ,கருவேப்பிலை ,பெருங்காயம் சேர்த்து தாளித்து இரண்டரை கால் கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கைவிடாமல் கட்டியாகாமல் கிளறவும்.
மாவை கொட்டும்போதே மற்றொரு கையால் கலந்துவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் வற்றிய பிறகு மிதமான தீயில் பத்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும். அடிக்கடி அடிப்பிடித்து விடாமல் கிளறி விடவும். பத்து நிமிடம் கழித்து நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் சுவையான உதிரி உதிரியான அரிசி உப்புமா தயாராகி இருக்கும். இதற்கு சைடிஸ் ஆக தேங்காய் சட்னி வைத்துக் கொள்ளலாம்.