ஐஸ்கிரீம் பிரியர்களே..! ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க….!

Published by
K Palaniammal

குழந்தைகளிடம் அதிக வரவேற்பை பெற்ற சாக்லேட்டை போலவே ஐஸ்கிரீமும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டால் உண்மையிலேயே சளி பிடிக்குமா.. பிடிக்காதா என்பது பற்றியும் நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீம் தானா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

ஐஸ்கிரீமும் ரசாயன பொருட்களும்

ஒரு ஐஸ் கிரீம் தயாராக பல ரசாயன பொருள்கள் உதவி செய்கிறது. கூடவே நமக்கு பல நோய்கள் வரவும் உதவி செய்கிறது என்று கூட கூறலாம். ஒரு ஐஸ்கிரீம் உருகாமல் இருக்கவும் , பால் கெடாமல் இருக்கவும், செயற்கை நிறமிகளுக்காகவும்  அதிக சுவையூட்டவும் பல ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. ஒரு சிலர் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் முட்டைக்கு பதிலாக பெயிண்ட் நீக்க பயன்படுத்தப்படும் டை எத்தில், கிளைகாள்  போன்ற கெமிக்கல் பொருள்களை சேர்க்கின்றனர். இதனால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரல் பாதிப்பை கூட ஏற்படுத்தும்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

ஐஸ்கிரீமை பொறுத்தவரை அதன் தரம் மிக முக்கியமானது அதை தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், ஐஸ் கட்டிகள் போன்றவைகள் சுகாதாரம் இல்லாமல் இருந்தால் சளி பிடிக்கும். சாப்பிட்ட அடுத்த நொடியே தொண்டை வலி போன்றவற்றை ஏற்படுத்தும். இது அனைவருக்குமே பொருந்தும் எனக் கூறவில்லை அலர்ஜி உள்ளவர்களுக்கு உடனடியாக அதன் விளைவை ஏற்படுத்தும். ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு சுடு தண்ணீரில் கல் உப்பை போட்டு வாய் கொப்பளித்து விட வேண்டும். இதைவிட சிறந்த மருந்து இல்லை இவ்வாறு செய்தால்  அடுத்த கட்டங்களான இருமல், சளி  போன்ற நிலைக்குச் செல்லாமல் இருக்கும்.

ஐஸ்கிரீமும் ப்ரோசன் டெசார்டும்

நாம் சாப்பிடுவது ஐஸ்கிரீமா அல்லது புரோசன்டேசார்டா என பலருக்கும் தெரியாது. ஐஸ்கிரீம் என்பது பாலை நன்றாக காய்ச்சி அதிலே நமக்குப் பிடித்த ஃப்ளேவர்களை சேர்த்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த புரோசன்  டெசர்ட் பாமாயில், வனஸ்பதி இதுபோன்ற கொழுப்புச்சத்து அதிகம் உள்ள எண்ணெய்களும், சர்க்கரை, கலர்ஸ், கம் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது இதை சாப்பிடும் குழந்தைகள் அதிக உடல் எடை மற்றும் சுகர் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள் .

கண்டறியும் முறை
ஐஸ்கிரீம் வாங்கிய பிறகு அதன் கவரில்  புரோசன் டெசர்ட்  அல்லது ஹைட்ரோ ஜெனரேட்டர் பேட்   அல்லது வாட்டர் இவற்றில் ஏதேனும் ஒன்று அந்தக் கவரில் இருந்தால் இது ப்ரோசன் ரெசார்ட் ஆகும்.

மூளையின் செயல்பாடு

குளிர்ச்சியான பொருளை நாம் சாப்பிடும் போது நமது மூளை 10 செகண்ட் ப்ரீஸ் ஆகிவிடும் இது இயல் நிலைக்குத் திரும்ப 20 நிமிடங்கள் ஆகும் இதனால் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இந்த ஐஸ்கிரீமுக்கு மூளையின் செயல்பாட்டை நிறுத்தும் திறனும் உள்ளது. தினமும் ஒரு ஐஸ்கிரீம் எடுத்துக் கொண்டால் மது அருந்துவதற்கு சமம் என பல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆகவே ப்ரோசன் டெசர்ட்  சாப்பிடுவதை விட ஐஸ்கிரீம் எடுத்துக் கொள்வது எவ்வளவோ மேல். இனிமேல் உங்கள் குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறீர்களா அல்லது ப்ரோசன் டெசர்ட் வாங்கி கொடுக்கிறீர்களா என்று நன்றாக கவனித்து வாங்கிக் கொடுங்கள்..

Published by
K Palaniammal

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

3 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

4 hours ago