வேலைக்கு செல்லும் கணவன்-மனைவியா.. அப்போ இந்த விஷயத்தை இணைந்து செய்யுங்க.!
சென்னை : ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலை செய்கிறீர்கள் என்றால் குடும்பத்தை கவனிப்பது போல், குடும்பத்திற்கு செலவழிக்கும் கணக்குகளையும் இருவரும் இணைந்து பார்த்து கொண்டால் இன்னும் நல்லா இருக்கும். இருவரும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீக்ள் என்பதையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இப்போதெல்லாம் கணவனும் மனைவியும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பது சகஜம். இருப்பினும், ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதில் சில நன்மைகள் மற்றும் குறைபாடுகளும் உள்ளது. திருமணமான தம்பதியினரின் உறவில் சரியான ஒற்றுமை இருக்க, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு இடையே நல்ல உறவு முறையை கையாள வேண்டும்.
குடும்ப நேரத்துடன் வேலைப் பொறுப்புகளையும் சரி செய்வது சவாலானதாக இருக்கலாம். ஆனால், தொழில் வெற்றியானது குடும்பத்துடன் தரமான நேரத்தை அனுபவிப்பதற்கு வழிவகுக்கும். வீட்டு வேலைகள் மற்றும் பெற்றோருக்குரிய கடமைகளை சமமாகப் பிரிப்பது இரட்டைத் தொழில் குடும்பத்தில் நல்லிணக்கத்தைப் கடைபிடிப்பது முக்கியமாகும்.
கணவன்-மனைவி செய்ய வேண்டியவை
பட்ஜெட், சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றில் ஒன்றாக இணைந்து செய்வது, ஒரு வீட்டை வாங்குவது, ஓய்வூதியத்திற்காக சேமிப்பது அல்லது குழந்தைகளின் கல்விக்கு நிதியளிப்பது உள்ளிட்ட அனைத்தையும் இரண்டு பேரும் இணைந்து செயல்பட வேண்டும்.
கணவன்-மனைவி செய்ய கூடாதவை
இருவரும் வாங்கும் சம்பளத்தில் கணவரோ அல்லது மனைவியோ தனக்கென தனிப்பட்ட செலவுக்கு பணத்தை எடுத்து கொள்ளலாம். ஆனால், அதனை கணவரோ அல்லது மனைவியோஒருவருக்கொருவர் கேட்டு கொள்ள கூடாது.
உதாரணத்துக்கு கணவன் சேமிப்பை பற்றி மனைவி கேட்க கூடாது, மனைவி பியூட்டி பார்லருக்காக வைத்திருக்கலாம் அதை பற்றியும் கணவன்கேட்க கூடாது. இவ்வாறு ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு குடும்பத்தை எடுத்து சென்றால் நன்றாக அமையும்.