சுவையான கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?

Default Image

நாம் மாலை நேரங்களில் தேநீருடன், ஏதாவது ஒரு உணவை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை

  • கேழ்வரகு மாவு ஒரு கப்
  • கடலை மாவு ஒரு கப்
  • பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி
  • மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு அரை மேசைக்கரண்டி
  • டால்டா ஒரு மேசைக்கரண்டி
  • எண்ணெய் ஒரு கப்

செய்முறை

கேழ்வரகு முறுக்கு செய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு மற்றும் கடலை மாவு போட்டு சல்லடையால் சலித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கரண்டியில் அல்லது வாணலியில் டால்டாவை போட்டு உருக்கி, சலித்து வைத்திருக்கும் மாவில் ஊற்றவேண்டும்.

அதன் பின்னர் மாவில் பூண்டு விழுது, மிளகாய்த் தூள் மற்றும் உப்பு  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்துக்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவேண்டும். 

பிறகு முறுக்கு உரலில் மாவு கொள்ளும் அளவிற்கு நிரப்ப வேண்டும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்திருக்கும் மாவை எண்ணெயில் வட்டமாக எண்ணெய் முழுவதும் பிழிய வேண்டும். பின் ஒரு நிமிடம் கழித்து திருப்பி போட வேண்டும். பிறகு மீண்டும் ஒரு நிமிடம் கழித்து எண்ணெய் அடங்கியதும் முறுக்கை எடுத்துவிடவேண்டும். இப்போது சுவையான கேழ்வரகு முறுக்கு தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்