அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி?

நமது வீடுகளில் விழாக்களின் போது, நாம் அனைவரும் பல வகையான பலகாரங்கள் செய்வதுண்டு. அந்த பலகாரங்களில் அச்சு முறுக்கை நாம் அதிகமாக செய்வதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான அச்சு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மைதா மாவு – 2 கப்
- எள் – 2 தேக்கரண்டி
- சர்க்கரை – 1 கப்
- முட்டை – 1
- ஏலக்காய் (பொடித்தது) – 2
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- சோடா உப்பு – ஒரு சிட்டிகை
- எண்ணெய் – பொரிப்பதற்கு
செய்முறை
முதலில் மைதா மாவில், எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து, தோசை மாவுப்பதத்தில் கலந்து கொள்ள வேண்டும். பின் தட்டையான, அகலமான வாணலியில் வாணலியில் எண்ணெய் விட்டு, அச்சு முறுக்கு கரண்டி முக்கால் பாகம் எண்ணெயில் மூழ்குமாறு சூடாக்க வேண்டும்.
பின் கரண்டி நன்கு சூடானதும் அதனை முக்கால் பாகம் மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் விட வேண்டும். கரண்டியில் ஒட்டிய மாவு வெந்து தானாக கழன்று விடும். அதன் பின் அதனை திருப்பி போட்டு நன்கு வேகவிட்டு எடுக்க வேண்டும். இப்பொது சுவையான அச்சு முறுக்கு தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!
February 27, 2025
பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025