கறுத்துப் போன முகத்திற்கு இந்த பருப்பை பயன்படுத்தினாலே போதும் முகம் நல்ல கலராக மாறிவிடும்.
சில பேர் சிறிய வயதில் நல்ல கலராக வெள்ளையாக இருப்பார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல விளையாடுவது, பள்ளிக்கு செல்வது என வெளியில் அதிகமாக அலைவார்கள். அதனால் அவர்களின் நிறம் கறுத்துப் போய் விடும். மிகவும் கறுப்பாகவும் சிலர் மாறி விடுவார்கள். இதனால் இளமை காலத்தில் எப்படி நமது வெள்ளையான நிறத்தை கொண்டு வருவது என தெரியாமல் வருத்தப்படுவார்கள். இந்நிலைக்கு எளிமையான வழி நமது வீட்டு சமையல் கட்டில் இருக்கக்கூடிய மைசூர் பருப்பு தான்.
இந்த பருப்பு சாம்பார் வைக்க பயன்படுத்துவார்கள். துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மைசூர் பருப்பு என இந்த மூன்று பருப்புகளையும் சாம்பார் வைக்க பயன்படுத்துவார்கள். அதில் பயன்படுத்தக்கூடிய மைசூர் பருப்பை தான் முக அழகிற்கு நாம் பயன்படுத்த போகின்றோம். இந்த பருப்பை முதலில் முதல் நாள் இரவு இரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்து ஊற வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில் எழுந்து அந்த மைசூர் பருப்பை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை தக்காளி பழம், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த விழுதினை உங்கள் முகத்தில் நன்கு ஸ்கரப் செய்து கொள்ள வேண்டும். உங்களது கைகள், கால்கள், கழுத்து பகுதி இவற்றிற்கும் இந்த மைசூர் பருப்பு பேஸ்ட்டை கொண்டு நீங்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். பின்னர் 15 நிமிடம் நன்கு உலர வைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இதே போல் வாரத்திற்கு இருமுறை செய்து வந்தாலே போதும். உங்களது கருமையான நிறம் மறைந்து வெண்மையான நிறம் வெளிவரத் தொடங்கும். பார்ப்பதற்கும் பொலிவாகவும் முகம் அழகாகவும் தோற்றமளிக்கும்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…