Child care tips-கோடை காலங்களில் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
‘ நீரின்றி அமையாது உலகு’ என்று ஒரு பழமொழியே உள்ளது. அதற்கேற்ப கோடை காலத்தில் நீர் மிகவும் அவசியமாக உள்ளது. அதேபோன்று கோடை காலங்களில் தான் நீர் இழப்பு என்பதும் ஏற்படுகிறது. அதனால் குழந்தைகளுக்கு போதுமான அளவு நீர் அருந்துவது மிகவும் நல்லது.
முதலில் குழந்தைகளை ஒன்று அல்லது இரண்டு முறை குளிக்க வைக்க வேண்டும், எண்ணெய் தேய்த்து குளிக்க வைப்பது மிகவும் நல்லது, அதிலும் நல்லெண்ணெய் ,விளக்கெண்ணெய் போன்ற குளிர்ச்சி தரக்கூடிய எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. இப்படி குளிக்கும் போது எண்ணெய் சோப்புடன் சேர்ந்து ஒரு பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். அதனை நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். இல்லை என்றால் உடம்பில் மடிப்பு உள்ள இடங்களில் படிந்து வியர் குறு வர வாய்ப்பு உள்ளது.
கோடைகாலங்களில் அதிகம் வியர்ப்பதால் வியர்குரு குழந்தைகளுக்கு வருவதுண்டு. அதற்கு பவுடர் அடிப்பதால் வியர்குரு வராது என்று நினைத்து பவுடர் அடிக்கிறார்கள். பவுடர் அடிப்பதனால் வியர்வை துவாரங்கள் அடைக்கப்படும். அதனால் பவுடர் அடிப்பது அவ்வளவு நல்லதல்ல.
இதற்கு பதிலாக சந்தனம் உடல் முழுவதும் பூசி பிறகு குளிக்க வைப்பது நல்லது .குளிக்கும் நீரில் வேப்பிலை போட்டு ஒரு 15 நிமிடம் கழித்து குளிக்க வைத்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும். வேப்பிலை ஒரு ஆன்ட்டி மைக்ரோபியல் ஆகும் .வியர்க்குரு உள்ள இடங்களில் கற்றாழை ஜெல் தடவி வந்தால் வியர்க்குரு மறையும்.
இந்தக் கோடையில் ஆடையில் அதிகம் அக்கறை கொள்ள வேண்டும். லூசான ஆடைகளை அணிவது நல்லது .காட்டன் ஆடைகள் தான் அணிய வேண்டும் .வெளியில் செல்லும்போது முழு கை டீ சர்ட் ,பேண்ட் போன்று முழுவதும் வெயில் மேலே படாதவாறு போட்டுக் கொள்வது நல்லது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் காலை 6 முதல் ஏழு மணி வரை குழந்தைகளை 15 நிமிடம் வெயிலில் இருந்தால் விட்டமின் டி கிடைக்கும்.
அறைகளை எல்லாம் காற்றோட்டமாக வைத்துக் கொள்வது நல்லது .பகல் நேரங்களில் கதவு ஜன்னல்களை மூடி வைக்கவும் ,இதனால் வெப்ப கற்று வீட்டுக்குள் வராமல் தடுக்கப்படும் .இரவில் திறந்து வைத்தால் மிகவும் காற்றோட்டமாக இருக்கும் .
கோடை காலங்களில் சிறுநீர் போவது மிகவும் குறையும். 24 மணி நேரத்தில் ஆறு தடவை சிறுநீர் போவது நல்லது. நீர் அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது நீரிழப்பு ஏற்படாமல் கொள்ளும்.
உணவுகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் கொடுப்பது நல்லது. காய்கறியில் சௌசௌ,புடலங்காய் பூசணிக்காய் வெள்ளரிக்காய் போன்றது நல்லது.
வெயில் காலங்களில் கிடைக்கக்கூடிய பழங்களான தர்பூசணி, கிர்னி பழம் ,நொங்கு இளநீர், திராட்சை போன்ற நீர்ச்சத்து பழங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மாம்பழம், அண்ணாச்சி பழம், பலாப்பழம் பப்பாளி பழம் இவைகள் சூடு தரக்கூடிய பழங்கள் ஆகும் .இதனை குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது.
குளிர்ச்சி தரக்கூடிய தயிர் சாதம், மோர் போன்றவை கொடுக்கலாம். சிக்கன் , எண்ணெயில் பொரித்த பண்டங்கள் ,காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது.
கோடை காலங்களில் சுத்தமாக இருப்பது மிகவும் நல்லது. வீட்டை சுத்தமாகவும் வெளியில் சென்று வருபவர்கள் கை கால்களை கழுவி விட்டு வருவது மிகவும் நல்லது.
குழந்தைகள் கை கழுவ வேண்டும் .இதனால் கிருமிகள் பரவுவது குறையும் .சுத்தமாக இல்லை என்றால் சின்னம்மை பெரியம்மை போன்ற நோய்கள் பரவும். இதனால் வீடுகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
எனவே பெற்றோர்கள் கோடையில் குழந்தைகளை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரித்துக் கொள்ள வேண்டும் .
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…