வெயிலின் தாக்கத்திலிருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

Published by
K Palaniammal

Eye care tips-கோடை காலத்தில் கண்களை பாதுகாப்பது எப்படி என இப்பதிவில் காணலாம்.

நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகி விட்டது. இந்த வெப்பத்தால் கண்களில்  பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கண்களில் ஏற்படும் பிரச்சனைகள்:

வெயிலில் வெளியே செல்லும்போது அதிகமான புற ஊதா கதிர்களால் கண்கள் பாதிக்கப்படும்.இதனால் கண்களில் சதை வளருதல், கண்களில் கட்டி வருதல் ,கண் வலி போன்றவை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க கண் கண்ணாடிகளை பயன்படுத்துவது மிக அவசியம்.

ஏசி அறை:

வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் பலரும் ஏசி அறைக்குள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். இதனால் கண் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது .இதன் காரணமாக கண் சிவத்தல், கண் அரித்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். மேலும் ஏசி காற்று நேரடியாக முகத்தில் படும்படி இருப்பதை தவிர்க்க வேண்டும்.

கணினி :

கணினியில் வேலை செய்பவர்கள் 20.. 20.. [டுவெண்ட்டி டுவெண்ட்டி ]ரூல்ஸை  கடைபிடிக்க வேண்டும். அதாவது 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கணினியின் திரையை தவிர்த்து வேறு ஏதேனும் மரங்களையோ செடிகளையோ பார்க்க வேண்டும்.

மேலும் கண்களை அடிக்கடி  மூடி திறக்க வேண்டும் இதற்கு பெயர் தான் 20 20 ரூல்ஸ் என கூறுவார்கள்.இவ்வாறு செய்யும் பொழுது கண்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் .

கண்களைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்:

சுத்தமான தண்ணீரை கொண்டு கண்களை அடிக்கடி கழுவ வேண்டும். அல்லது தண்ணீரில் கண்களை சுழற்றிக் கொடுக்க வேண்டும் இதனால் கண்களில் தூசி ஏதேனும் இருந்தால் வெளியேறிவிடும் .

இரு உள்ளங்கைகளையும் தேய்த்தால் சூடு வரும் அதை கண்களில் வைத்து ஒத்திக் கொடுத்தால் கண் வீக்கம் வராமல் தடுக்கலாம் .மேலும் கண்களுக்கும் ஓய்வு கிடைக்கும். விட்டமின் ஏ அதிகம் உள்ள உணவுகளை நம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் ஏ சத்து கண்களுக்கு மிக நல்லது. இந்த விட்டமின் ஏ  பச்சை நிற கீரைகள் கேரட், பப்பாளி பழம், மாதுளை, மீன் வகைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. மேலும் மருத்துவரின் பரிந்துரையின்படி மீன் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம்.

ஆகவே இந்த கோடை வெப்பத்தை நாம் கடக்க வேண்டும் என்றால் நம்மை தற்காத்துக் கொள்வது அவசியம். எனவே விழிப்போடு இருந்து  விழியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Recent Posts

வள்ளுவருக்கு காவி உடை., மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஆளுநர் மாளிகை!

சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…

24 mins ago

“சாரிமா தெரியாம அடிச்சுட்டேன்”…கதறி அழுத ரசிகை..மன்னிப்பு கேட்ட சஞ்சு சாம்சன்!

தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…

34 mins ago

நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…

1 hour ago

Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…

சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…

1 hour ago

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

2 hours ago

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

2 hours ago