அசத்தலான தேங்காய் ரசம் செய்வது எப்படி?
நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசத்தை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான தேங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் துருவல் – ஒரு கப்
- பூண்டு – 5
- தக்காளி விழுது – அரை கப்
- பச்சை மிளகாய் – 3
- மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
- மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன்
- கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி அளவு
- உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
- சீரகம் கடுகு சிறிதளவு
- எளிதாக சிறிய பூண்டு 2
- கருவேப்பிலை தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளியை சுடுநீரில் ஊற வைத்து, 10 நிமிடம் கழித்து மேல் தோல் நீக்கி விட்டு, விழுதாக அரைக்கவேண்டும். பின் தேங்காய், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகு தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விடவேண்டும். நுரைத்து வந்த பின் நெய்யில் தாளித்து, அதனை ரசத்தில் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான தேங்காய் ரசம் தயார்.