அசத்தலான வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது, வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளது. நாம் நமது வீடுகளில் பல வகையான பொங்கலை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சத்தான வரகரிசி சர்க்கரை பொங்கல் செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வரகரிசி – கால் கிலோ
- பாசிப்பருப்பு – 50 கிராம்
- வெள்ளம் – கால் கிலோ
- முந்திரி – 10
- திராட்சை – 10
- நெய் – தேவைக்கேற்ப
- பால் – 1 கப்
- தேங்காய் துருவல் – கால் கப்
- ஏலக்காய் – 3
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வரகு அரிசி, பாசிப்பருப்பை கடாயில் இட்டு லேசாக வறுக்க வேண்டும் பின் கடாயில் ணெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காயை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த பராசிபருப்பை முதலில் போடா வேண்டும். பாசிப்பருப்பு அரை பதம் வெந்த உடன், வரகு அரிசியை போட்டு குய வேக விட வேண்டும். பின் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
அதன் பின் அதில் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி, தேங்காய் தருவாள், ணெய் அஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான வரகரிசி சர்க்கரை பொங்கல் தயார்.