bottle gourd vadai
சுரைக்காய் வடை – சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம்.
சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே செய்யாமல் இது போல் வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுரக்காய் நம் உடலில் உள்ள தேவையில்லாத உப்பு நீர்களை வெளியேற்றும்.
முதலில் சுரைக்காய் துருவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு ,பெரிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
சுரக்காயில் தண்ணீர் இருந்தால் அதை வடித்து விட்டு ,அதில் அரிசி மாவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் பற்றவில்லை என்றால் எடுத்து வைத்துள்ள சுரக்காய் நீரை பயன்படுத்திக் கொள்ளவும்.
இப்போது அதில் மஞ்சள் தூள், சீரகம், கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
காய்ந்த பிறகு கையில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை மெல்லிசாக தட்டி எண்ணெயில் போடவும். இலையை பயன்படுத்தியும் மாவை தட்டி பொறிக்கலாம். இப்போது எண்ணெயில் போட்ட வடை பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுத்தால் நீர் சத்து மிக்க சுரக்காய் வடை தயாராகிவிடும்.
சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…
கோவை : தமிழ்நாடு அரசியலில் எதிரும் புதிருமாக இருந்து வரும் தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இன்றைய…
மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…