சப்பாத்திக்கு ஏற்ற வெள்ளை குருமா செய்வது எப்படி ?
White kurma -வெள்ளை குருமா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
தாளிக்க தேவையானவை
- எண்ணெய் =4 ஸ்பூன்
- சீரகம் =1 ஸ்பூன்
- பட்டை =2
- பிரியாணி இலை =1
- ஏலக்காய் =3
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =1 ஸ்பூன்
அரைப்பதற்கு தேவையானவை
- பொட்டுக்கடலை =2 ஸ்பூன்
- சோம்பு =1 ஸ்பூன்
- கசகசா =1ஸ்பூன்
- முந்திரி =10
- தேங்காய் =அரைமூடி [துருவியது ]
காய்கறிகள்
- பச்சை பட்டாணி =50 கிராம்
- கேரட் =50 கிராம்
- பீன்ஸ் =50 கிராம்
- உருளைக்கிழங்கு =50 கிராம்
- வெங்காயம் =2
- பச்சைமிளகாய் =5
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பிரியாணி இலை, ஏலக்காய் ,பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதில் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய் வதங்கியதும் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ,பச்சை பட்டாணி சேர்த்து கிளறி காய்கறிக்கு தேவையான சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் முக்கால் பதம் வேக வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது மிக்ஸியில் துருவிய தேங்காய், முந்திரி, பொட்டுகடலை ஊறவைத்த கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காய்கறி முக்கால் பதம் வெந்தவுடன் இந்த அரைத்த விழுதுகளை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி ஐந்து நிமிடம் வேக வைக்கவும். ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சப்பாத்திக்கு ஏற்ற வெள்ளை குருமா தயார்.