அசத்தலான மாங்காய் ரசம் செய்வது எப்படி?

Default Image

நமது வீடுகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசம் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மாங்காய் ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையானவை 

  • மாங்காய் – பாதி 
  • பச்சை மிளகாய் – 2 
  • மல்லிதழை – ஒரு கைப்பிடி 
  • சீரகம் – ஒரு மேசைக்கரண்டி 
  • பூண்டு – 3 பற்கள் 
  • மிளகு – கால் தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி 
  • பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி 
  • உப்பு – தேவைக்கேற்ப 
  • எண்ணெய் – தேவைக்கேற்ப 
  • தாளிக்க – கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் 

செய்முறை 

முதலில் ஒரு சிறிய குக்கரில் மாங்காய், மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். பின் ஆவி  திறந்து கரண்டியால் மசித்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, சீரகம், மிளகு மற்றும் பாதி அளவு மல்லி தழை சேர்த்து சிறிய உரலில் போட்டு இடித்து வைக்க வேண்டும். 

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துலள்ள பொருட்களை தாளித்து, பெருங்காய தூள் போட்டு இடித்தவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும். அத்துடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள மாங்காவை கரைசலை சேர்த்து, உப்பு போட்டு தேவையான அளவு சுடுநீர் ஊற்ற வேண்டும். அனைத்து சேர்த்து ஒரு கொத்தி வந்ததும், மல்லி தழை சேர்த்து இறக்க வேண்டும். இப்பொது சுவையான மாங்காய்  ரசம் தயார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்