அசத்தலான சிக்கன் தோசை செய்வது எப்படி?
அசத்தலான சிக்கன் தோசை செய்யும் முறை.
நம்மில் அதிகமானோர் சிக்கனை பயன்படுத்தி செய்கின்ற அனைத்து உணவுகளையும் விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான சிக்கன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கோழிக்கறி – 200 கிராம்
- மைதா மாவு – 250 கிராம்
- தயிர் – 1 டேபிள் ஸ்பூன்
- அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 5
- இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
- காரட் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் கோழிக்கறியை எலும்பில்லாமல் பிரித்து எடுத்துக் கொண்டு, துவையல் பாக்குவதில் மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் மைதா, அரிசி மாவு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், காரட் துருவல், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து, எண்ணெய் விட்டு மாவை ஊற்ற வேண்டும். இருபக்கமும் வெந்தவுடன் இறங்கி விட வேண்டும். இப்பொது சுவையான சிக்கன் தோசை தயார்.