மிக சுவையான பருப்பு டால் வீட்டிலேயே செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!
பெரும்பாலும் பருப்பு வைத்து செய்யக்கூடிய உணவுகள் அனைத்துமே சாதாரணமாக இருந்தாலும் அட்டகாசமான சுவை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த பருப்பை வைத்து எப்படி குழம்புகளை தயார் செய்வது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் பருப்பு டால் அட்டகாசமாக இருக்கும். அவற்றை எப்படி செய்து செய்வது என்பது குறித்து இன்று நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- துவரம்பருப்பு
- பாசிப்பருப்பு
- தக்காளி
- பச்சை மிளகாய்
- காய்ந்த மிளகாய்
- மஞ்சள் தூள்
- உப்பு
- வெங்காயம்
- கருவேப்பிலை
- பூண்டு
- பெருங்காயத்தூள்
செய்முறை
நாம் எடுத்து வைத்த துவரம் பருப்பு மற்றும் பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு குக்கரில் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் லேசாக கரண்டியை வைத்து மசித்து விடவும். அதன் பின்னதாக ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சின்ன வெங்காயம், கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காய தூள் போட்டு தாளித்து குக்கரில் வேக வைத்து எடுத்துள்ள பருப்புடன் சேர்த்து கிளறி பரிமாறினால் அட்டகாசமான பருப்பு தால் வீட்டிலேயே தயார்.