சுவையான இட்லி டோக்ளா செய்வது எப்படி?

Default Image

நாம் காலை நேரங்களில் அதிகமாக இன்டலியை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான இட்லி டோக்ளா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  • இட்லி  – 4, 5
  • காரட் – 1
  • தயிர் – கால் கப்
  • துருவிய இஞ்சி  -கால் தேக்கரண்டி
  • பச்சை மிளகாய்  – 2
  • கடுகு – கால் தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – கால் தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி தழை  – 3 கொத்து
  • உப்பு – கால் தேக்கரண்டி
  • எண்ணெய் – அரை மேசைக்கரண்டி

செய்முறை

முதலில் கேரட்டை வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பீன்ஸ், பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி , கறிவேப்பிலை போட்டு வதக்கவேண்டும். அதனுடன் நறுக்கிய பீன்ஸ், கேரட் சேர்த்து 5 நிமிடம் வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இட்லியை உதிர்த்து அதனுடன் தயிர் சேர்க்க வேண்டும். பின் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், கொத்தமல்லித் தழை சேர்த்து பிசைந்து கொள்ளவேண்டும். ஒரு வட்டமான தட்டில் பிசைந்து கலவையை சமமாக பரப்பி வைக்க வேண்டும். பிறகு இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் டோக்ளா தயார் செய்த தட்டை வைத்து மூடி, 10 நிமிடம் வேகவிட்டு எடுக்க வேண்டும். வெந்ததும் அதில் இட்லி பொடி தூவி பரிமாறவேண்டும். இப்போது சுவையான இட்லி தோசை தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
gold price
Annamalai - BJP-Tasmac
TN Assembly Speaker Appavu
BJP State President Annamalai
Thirumavalavan - VCK
ADMK Chief secretary Edappadi Palanisamy