சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் அதிகமாக தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான கார்ன் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம். 

தேவையான பொருட்கள்

  • தோசை மாவு – தேவையான அளவு
  • வேக வைத்த மக்காச்சோளம் – அரை கப்
  • வெங்காயம் – 2
  • துருவிய சீஸ் – ருசிக்கு
  • உருளைக்கிழங்கு – 2
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • இஞ்சி – சிறிது
  • முந்திரி – 5
  • மஞ்சள் தூள்  -கால் தேக்கரண்டி
  • உப்பு  – தேவையான அளவு

செய்முறை

முதலில் உருளை வேக வைத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி நறுக்க வேண்டும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், தாளிக்க வேண்டும். இதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் வெங்காயம் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி வைக்கவேண்டும். கடைசியாக வேகவைத்த கார்ன் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும். வழக்கம்போல் தோசை ஊற்றி, எண்ணெய் விட்டு மூடிவிடவேண்டும். தோசை வெந்ததும் அதன் நடுவே ஒரு பாதியில் உருளை கார்ன்கலவையை சிறிது துருவிய சீஸ் தூவி மடித்து சூடாக பரிமாற வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

அவதூறு பரப்பாதீங்க! “ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

சென்னை :  இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…

51 minutes ago

டி20 கிரிக்கெட்டில் முதல் வீரர் இவர் தான்! ‘ஹர்திக் பாண்டியா’ செய்த பலே சம்பவம்!

மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…

1 hour ago

குட் பேட் அக்லி ஷூட்டிங் ஓவர்? பொங்கலுக்கு AK என்ட்ரி கன்பார்ம்!

சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…

2 hours ago

’21 நாளில் ஆஜராக வேண்டும்’ …ஊழல் வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…

2 hours ago

உ.பி-யில் பரபரப்பு…சர்வே செய்ய சென்ற அதிகாரிகள் போலீஸ் மீது தாக்குதல்!

உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி  ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…

3 hours ago

“அவர் தயிரியமாக முடிவெடுப்பவர்…” ஜானகி நூற்றாண்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…

3 hours ago