அசத்தலான ரவை போண்டா செய்வது எப்படி?
அசத்தலான ரவை போண்டா செய்யும் முறை.
நாம் அனைவரும் அலையில் தேநீர் அருந்தும் போது, அதனுடன் இடை உணவினை சாப்பிடுவதை விரும்புவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளை நாம் கடையில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான ரவை போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ரவை – 2 கப்
- தயிர் – ஒரு கப்
- வெங்காயம் – 2 பச்சை இலாய் – 3
- கொத்தமல்லி – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் தயிர், ரவை மற்றும் உப்பு சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த அவனை 3 அணி நேரம் ஊற வைக்க வேண்டும். 3 மணி நேரங்கள் கழித்து இந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை போட வேண்டும்.
இந்த மாவுடன் வெங்காயம் நன்கு சேருமாறு பிசைய வேண்டும். பின் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு போண்டாவாக போட்டு பொரித்தெடுக்க வேண்டும். இப்பொது சுவையான போண்டா ரெடி.