காரசாரமான உடுப்பி ரசம் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!
காரசாரமாக உடுப்பி ஸ்டைலில் ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை –காரசாரமாக உடுப்பி ஸ்டைலில் ரசம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- தேங்காய் எண்ணெய்= இரண்டு ஸ்பூன்
- தனியா= ஒரு ஸ்பூன்
- வெந்தயம்= அரை ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்= மூன்று
- பச்சைமிளகாய் =2
- துவரம் பருப்பு= அரை கப்
- சீரகம் =ஒரு ஸ்பூன்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- புளி = எலுமிச்சை அளவு
- தக்காளி= மூன்று
- வெல்லம்= 1 ஸ்பூன்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தனியா, வெந்தயம் ,சீரகம், காய்ந்த மிளகாய், ஒரு கொத்து கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்துக் கொள்ளவும். இப்போது அதனுடன் பெருங்காயம் அரை ஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் .மற்றொரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை ,பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து தக்காளிகளையும் நறுக்கி சேர்த்து நன்கு வதக்கவும் .
பிறகு மஞ்சள் தூள் சேர்த்து புளி கரைசலையும் ஊற்றி ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு பருப்பை நன்கு மசிய வேகவைத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது நாம் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி கொதிக்க வைத்து இறக்கினால் உடுப்பி ஸ்டைலில் ரசம் தயாராகிவிடும்.