காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.
சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..
தேவையான பொருட்கள்;
- பச்சை மிளகாய்= 150 கிராம்
- புளி =50 கிராம்
- வெல்லம் =அரை ஸ்பூன்
- உளுந்து =அரை ஸ்பூன்
- கடுகு= அரை ஸ்பூன்
- பெருங்காயம்= 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
- நல்லெண்ணெய்= தேவையான அளவு.
செய்முறை;
முதலில் பச்சை மிளகாயை கழுவி காம்புகள் நீக்கி சிறிதாக கீறி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி காய வைத்துக் கொள்ள வேண்டும் .நல்லெண்ணெய் அதிகமாக சேர்க்கும் போது சுவை கூடுதலாக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு ,உளுந்து ,கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும் .
பச்சை மிளகாய் வதங்கியதும் ஊற வைத்துள்ள புளியை கரைத்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் பெருங்காயத்தூள் ,மஞ்சள் தூள் ,தேவையான அளவு உப்பு ,சிறிதளவு தண்ணீர் சேர்த்து சரி பார்த்துக் கொள்ளவும். இவற்றை நன்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். இப்பொழுது சுவையான காரசாரமான புளி மிளகாய் தயார்.