Channa masala– சென்னா மசாலா செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம் .
சுண்டலை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பிறகு தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .அரை கப் சுண்டலை தனியாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது பூண்டு மற்றும் , பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், கரம் மசாலா, சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து கிளறி விடவும். அதனுடன் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்க்கவும். இப்போது இதன் பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும். பிறகு அரைத்து வைத்துள்ள சுண்டலையும் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 1 கொதி வந்ததும் சுண்டலையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான சென்னா மசாலா தயார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…