அசத்தலான மீன் புட்டு செய்வது எப்படி?
நாம் மீனை வைத்து பல வகையான உணவுகள் விதவிதமாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சுவையான மீன் புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மீன் – 500 கிராம்
- காய்ந்த மிளகாய் – 4
- வெங்காயம் – ஒன்று
- மிளகு தூள் – முக்கால் தேக்கரண்டி
- தனியா தூள் – முக்கால் தேக்கரண்டி
- தேங்காய் – கால் மூடி
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- மஞ்சள் முட்டை – ஒன்று
- எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
- கடுகு – அரை தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
- புளி – சிறிதளவு
செய்முறை
முதலில் மீனை உப்பு மஞ்சள்தூள் போட்டு கொஞ்சமாக நீர் விட்டு புளியைக் கரைத்து விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். பின் வெங்காயத்தை பொடி பொடியாக வெட்டி தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும் காய்ந்த மிளகாய் கிள்ளிப்போட்டு கறிவேப்பிலை வெட்டிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். அதன் பின்னர் மீன் கலவையை கொட்டி உதிர கிளறவும். நன்கு உதிர்ந்தது வந்ததும் தேங்காய் போட்டு, மேலும் சற்று நேரம் கிளறி இறக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் புட்டு தயார்.