அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி?

அசத்தலான மசாலா மீன் செய்யும் முறை.
நாம் நமது வீடுகளில் மீனை பல வகைகளில் உணவாக செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான மசாலா மீன் பொரியல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மீன் துண்டுகள் – ஒரு கிலோ
- இஞ்சி – சிறிய துண்டு
- பூண்டு – 6 பல்
- பட்டை – ஒரு சிறு துண்டு
- ஏலக்காய் – 2
- உப்பு – சிறிதளவு
- எலுமிச்சை சாறு – அரை தேக்கரண்டி
- மீன் மசாலா தூள் – 50 கிராம்
- கார்ன் ப்ளார் – 2 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் மீனை துண்டாக வெட்டி, நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்சியில் இஞ்சி, பூண்டு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைக்க வேண்டும். பின் அரைத்தவற்றுடன் மீன் மசாலா தூள், கார்ன் ப்ளார், எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்து பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும்.
பின் இந்த மசாலா கலவையை மீன் துண்டுகளின் மீது தடவி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீன்களை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான மசாலா மீன் பொரியல் தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025