புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!
முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருள்கள்;
- முளைகட்டிய பச்சைப்பயிறு- ஒரு கப்
- முட்டை- மூன்று
- மிளகாய் தூள் -ஒரு ஸ்பூன்
- மஞ்சள்தூள் -அரை ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- ஒரு கைப்பிடி
- எண்ணெய் – நான்கு ஸ்பூன்
- சின்ன வெங்காயம் -15
- பச்சை மிளகாய்- 4
- கடுகு உளுந்து- ஒரு ஸ்பூன்
செய்முறை;
பச்சைப்பயிரை முளைகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு ,கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் முழுமையாக வதங்காமல் பாதி வதங்கினால் போதுமானது.
இப்பொழுது முளைக்கட்டிய பயிரை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும் .ஒரு நிமிடம் கலந்து விட்டு பிறகு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு வறுத்தெடுக்கவும் . பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கி தூவி இறக்கினால் சத்தான முளைக்கட்டிய பச்சைப்பயிறு மசாலா ரெடி..