பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி?
பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் ..
சென்னை- பிள்ளையார்பட்டி ஸ்பெஷல் கொழுக்கட்டை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம் ..
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி= ஒரு கப்
- பாசிப்பருப்பு= கால் கப்
- தண்ணீர்= 3 கப்
- வெல்லம் =அரைகப்
- தேங்காய் துருவல்= அரை கப்
- ஏலக்காய் =ஒரு ஸ்பூன்
செய்முறை;
பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும் . ஒரு அகலமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அதில் இந்த அரைத்த மாவை சேர்த்து கிளற வேண்டும்.
மாவு திக்கானதும் வெல்லம் அரை கப் சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும் .பின்பு தேங்காய் துருவலையும் மற்றும் ஏலக்காய் சேர்த்து கலந்து விட்டு ஆறவைக்க வேண்டும் .ஆறிய பின் கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்தால் தித்திப்பான சுவையில் பிள்ளையார்பட்டி கொழுக்கட்டை ரெடி..