அசத்தலான ஆந்திரா கார தோசை செய்வது எப்படி?
அசத்தலான ஆந்திரா தோசை செய்யும் முறை.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தோசையை விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசத்தலான ஆந்திரா கார தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- வர மிளகாய் பி 10
- முழு பூண்டு – 1
- உப்பு – சிறிதளவு
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- முட்டை – ஒன்று
- தோசை மாவு – ஒரு கப்
செய்முறை
முதலில் கொதிக்கும் நீரில் வரமிளகாயை ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும். பின் பூண்டுகளை உரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் உப்பு சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் தோசை கல்லில் மாவை ஊற்றி, அதி முட்டையை உடைத்து ஊற்றி தோசை முழுவதும் பரவுமாறு செய்ய வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை பரவலாக தடவி, இருபக்கமும் நன்கு வேக வைத்து பரிமாற வேண்டும் இப்போது சுவையான ஆந்திரா கார தோசை தயார்.