சத்தான, சுவையான கடலை மாவு பூரி செய்வது எப்படி?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த, சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் அனைவரும் காலையில், அல்லது இரவில் டிபன் செய்து சாப்பிடுவது வழக்கம். அதிலும், பூரி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவது உண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான கடலை மாவு பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கடலை மாவு – கால் கப்
- மைதான மாவு – 1 கப்
- சோம்பு – ஆறாய் டீஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவைக்கேற்ப
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கான் பின் ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, மைதா மாவு, சோம்பு, மிளகாய் தூள், உப்பு மற்றும் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி தண்ணீர் மென்மையாக பூரி பதத்திற்கு பிசைய வேண்டும்.
அதன் பின் அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். கடைசியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.