சத்தான சப்பாத்தி புட்டு செய்வது எப்படி?
நம்மில் அதிகமானோர் காலையில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். ஆனால் சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் குறைவு தான் தற்போது இந்த பதிவில் சத்தான சப்பாத்தி புட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கோதுமை மாவு – 4 சப்பாத்தி செய்ய தேவையான அளவு
- தேங்காயாய் துருவல் – 3 தேக்கரண்டி
- சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
- நெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமை மாவை பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். உருட்டி வைத்த மாவை சப்பாத்தி காட்டையில் வைத்து சப்பாத்தியாக உருட்ட வேண்டும்.
பின் தவாவை சூடாக்கி திரட்டிய சப்பாத்தியை போட்டு, இரு புறமும் சிறிது எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும். பின் சுட்டெடுத்த சப்பாத்திகளை ஆறவிட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் துண்டுகளாக்கிய சப்பாத்தியை மிக்சியில் போட்டு பொடியாக்கி, அதனுடன் சர்க்கரை, நெய் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு சுற்றி எடுத்தால் சப்பாத்தி புட்டு தயார்.