சத்தான ஓட்ஸ் பஜ்ஜி செய்வது எப்படி?
சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்யும் முறை.
மாலை நேரங்களில் நாம் குழந்தைகளுக்கு உணவை கடையில் வாங்கி கொடுப்பதை விட, வீட்டிலேயே உணவை செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில், சுவையான ஓட்ஸ் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- ஓட்ஸ் – அரை கப்
- கடலை மாவு – கால் கப்
- அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி
- முட்டை – 1
- மிளகாய்த் தூள் – அரைத்தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய குடை மிளகாய் – சிறிது
- சீரகம் – சிறிதளவு
- பேக்கிங் பவுடர் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் பொரிக்க – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஓட்ஸ் பஜ்ஜி செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு வரும் வரை கலந்து 15 நிமிடம் ஊற விட வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சுவையான ஓட்ஸ் பஜ்ஜி தயார்.