சத்தான நெய் தோசை செய்வது எப்படி?

நமது வீடுகளில் காலை உணவாக தோசை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான நெய் தோசை செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- புழுங்கல் அரிசி – அரை கிலோ
- பச்சரிசி – 200 கிராம்
- உளுந்து – 150 கிராம்
- வெந்தயம் – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தனித்தனியாக ஊற வைத்து நன்கு கழுவி தனித்தனியாக அரைத்து, ஒன்றாக கலந்து, தேவையான அளவு உப்பு போட்டு குறைந்தது 10 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
மாவு புளித்தவுடன் தோசை கல்லை சசூடாக்கி, எண்ணெய் தேய்த்து, ஒரு கரண்டி மாவு எடுத்து, மெல்லியதாக வார்க்க வேண்டும். பின் தோசையை சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தவுடன், நெய் விட்டு மடித்து சூடாக பரிமாற வேண்டும். இப்பொது சுவையான நெய் தோசை தயார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025