சத்தான கேரட் பொரியல் செய்வது எப்படி?

Published by
லீனா

நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

நாம் நமது வீடுகளில் சமையலின் போது, பல வகையான காய்கறிகளை சாய்த்து சாப்பிடுவது உண்டு. காய்கறிகள் அனைத்திலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. அதிலும் நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை

  • கேரட் – அரை கிலோ
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
  • பச்சை மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் கேரட்டை நீரில் கழுவி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வரும் வரை அடுப்பில் வைத்து  வேண்டும். பின் தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி.

Published by
லீனா

Recent Posts

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் வியாழன் கிழமை (07/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

29 mins ago

சூரசம்ஹாரம் உருவான வரலாறும் . .முருக பெருமானின் அற்புதங்களும்..

சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…

55 mins ago

“ரொம்ப நன்றி” தேர்தல் வெற்றிக்கு காரணமான மஸ்க்.! நெகிழ்ச்சியுடன் டிரம்ப் பேச்சு..,

வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…

1 hour ago

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

2 hours ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

2 hours ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

2 hours ago