சத்தான கேரட் பொரியல் செய்வது எப்படி?
நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
நாம் நமது வீடுகளில் சமையலின் போது, பல வகையான காய்கறிகளை சாய்த்து சாப்பிடுவது உண்டு. காய்கறிகள் அனைத்திலுமே நமது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பலவகையான சத்துக்கள் உள்ளது. அதிலும் நாம் சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவது உண்டு. அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில், பொரியல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை
- கேரட் – அரை கிலோ
- தேங்காய் துருவல் – அரை கப்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் -1 சிட்டிகை
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கேரட்டை நீரில் கழுவி துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் கேரட்டை சேர்த்து, கால் கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் தண்ணீர் வரும் வரை அடுப்பில் வைத்து வேண்டும். பின் தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், கேரட் பொரியல் ரெடி.