வெயில் சூட்டை தணிக்க நுங்கு பால் சர்பத்.! செய்வது எப்படி.?

Nungu Milk Sorbet: நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
வெயில் காலத்தில் ஏற்படும் சின்னம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் குளிர்ச்சியையும் கொடுக்கக் கூடியது நுங்கு.
இப்பொது அடிக்கிற இந்த கோடை வெயிலுக்கு அதிகமாக கிடைக்கும் நுங்கை கொண்டு ஸ்பெஷல் நுங்கு பால் சர்பத் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- நுங்கு துண்டு – 10
- இளநீர் வழுக்கைத் துண்டுகள்
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- பனை வெல்லம் – 1/2 கப்
- தேங்காய் பால் – 1 ½ கப்
முதலில் இளநீர் வழுக்கைத் துண்டுகள் மற்றும் நுங்கு துண்டுகளுடன் பனை வெல்லம் ஆகியவற்றை மிக்சி ஜாரில் போடு கூழ் போல அரைக்கவும்.
பின்னர், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து தேங்காய் பாலை ஊற்றி, சில நுங்கு துண்டுகளை சேர்த்தால் சுவையான நுங்கு பால் சர்பத் ரெடி.
இதனை உங்க பிள்ளைகளுக்கும் வேலைக்கு சென்று வரும் உங்கள் கணவருக்கும் கொடுத்து பாருங்கள் கொடுக்கும் ஒன்னு விடாமல் குடித்து விடுவார்கள்