எண்ணெய் இல்லாத மைசூர் பாக் செய்வது எப்படி ?
மைசூர் பாக் – எண்ணெய் இல்லாமல் சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- கடலை மாவு =1 கப்
- ரீபைண்ட் எண்ணெய் =1 கப்
- சர்க்கரை =1.1/2 கப்
செய்முறை:
முதலில் கடலைமாவில் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் சர்க்கரை சேர்த்து பாகு தயார் செய்து கொள்ளவும் .பாகுவை ஒரு கம்பி பதத்திற்கு வரும்வரை கிளற வேண்டும்.
ஏனெனில் மைசூர் பாக்கிற்கு சர்க்கரை பதம் சரியான முறையில் தயார் செய்ய வேண்டும். இப்போது சர்க்கரை பாகு ஒரு கம்பி பதத்திற்கு வந்த பிறகு கரைத்து வைத்துள்ள கடலை மாவை சர்க்கரை பாகு வில் ஊற்றி கைவிடாமல் கிளற வேண்டும் .அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். மாவு நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
நம் செய்யும் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வர வேண்டும் இதுதான் சரியான பக்குவம் ஆகும். பிறகு இதை ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றி இரண்டு மணி நேரம் ஆற வைத்து விடவும். ஆறிய பிறகு உங்களுக்கு பிடித்த வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும். இப்போது சுவையான மைசூர் பாக் தயார்.