Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .
குக்கரில் அரை கிலோ மட்டன் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 100 ml தண்ணீர் சேர்த்து மூணு அல்லது நாலு விசில் விட்டு வேக வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் மல்லி , சீரகம் ,பட்டை ,ஏலக்காய், கிராம்பு இவைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸியில் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 100 ml நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்த மட்டனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெயில் மட்டனை பொறிப்பதால் ஒரு மாதம் வரை மட்டன் கெடாமல் இருக்கும்.
பிறகு அதே எண்ணெயில் கடுகு, சீரகம் , சிறிதளவு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பிறகு பூண்டு , சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து என்னையில் வதக்கவும். பின்பு காஷ்மீர் மிளகாய் தூள் ஸ்பூன் கலர் கொடுப்பதற்காக சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் எண்ணெயில் பொரித்த மட்டனை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.இரண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…
சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…