மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம் .!

mutton pickle

Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் .

தேவையான பொருட்கள் :

  • மட்டன் =1/2 கிலோ
  • மஞ்சள் தூள் =1 ஸ்பூன்
  • மல்லி =2 ஸ்பூன்
  • சீரகம் =1 ஸ்பூன்
  • பட்டை =1
  • ஏலக்காய் =3
  • கிராம்பு =4
  • நல்லெண்ணெய் =100 ml
  • பெருங்காயம் =1 ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் =3
  • பூண்டு =30 பள்ளு
  • இஞ்சி =2 ஸ்பூன்
  • காஷ்மீர் மிளகாய் தூள் =1 ஸ்பூன்
  • மிளகாய் தூள் =கால் கப்

mutton 1

செய்முறை:

குக்கரில் அரை கிலோ மட்டன் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 100 ml தண்ணீர் சேர்த்து மூணு அல்லது நாலு விசில் விட்டு வேக வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் மல்லி , சீரகம் ,பட்டை ,ஏலக்காய், கிராம்பு  இவைகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். இதனை ஆறவைத்து மிக்ஸியில் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

spices 2

பிறகு ஒரு பாத்திரத்தில் 100 ml நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்த மட்டனை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெயில் மட்டனை பொறிப்பதால் ஒரு மாதம் வரை மட்டன் கெடாமல் இருக்கும்.
பிறகு அதே எண்ணெயில்  கடுகு, சீரகம் , சிறிதளவு பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

garlick ginger

பிறகு பூண்டு , சிறு துண்டுகளாக நறுக்கிய இஞ்சி சேர்த்து என்னையில் வதக்கவும். பின்பு காஷ்மீர் மிளகாய் தூள் ஸ்பூன் கலர் கொடுப்பதற்காக சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.mutton fry

அதனுடன் எண்ணெயில் பொரித்த மட்டனை சேர்த்து நன்கு வேக வைக்கவும். அதனை ஆற வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.இரண்டு மூன்று நாள் கழித்து எடுத்து சாப்பிடும் பொழுது சுவை அருமையாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்