பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?

ஆட்டுக்கால் பாயா -பாய் வீட்டு முறையில் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக்கால் =கால் கிலோ
- வெங்காயம்= மூன்று
- தக்காளி= இரண்டு
- கசகசா =ஒரு ஸ்பூன்
- ஏலக்காய்= 2
- முந்திரி= 15
- சோம்பு= இரண்டு ஸ்பூன்
- எண்ணெய்=3
- பட்டை= இரண்டு துண்டு
- கிராம்பு= 4
- இஞ்சி பூண்டு பேஸ்ட்= 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய்= ஐந்து
- மிளகுத்தூள்= அரை ஸ்பூன்
- சீரகத்தூள் =அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள்= சிறிதளவு
- புதினா= ஒரு கைப்பிடி அளவு
- தேங்காய்= கால் மூடி
செய்முறை:
முதலில் ஆட்டுக்காலை சுத்தம் செய்து குக்கரில் வெங்காயம் ஒன்று ,தக்காளி ஒன்று, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு கொத்தமல்லி இலைகள் சேர்த்து10 விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும் .இப்போது மிக்ஸியில் தேங்காய், முந்திரி, சோம்பு ஒரு ஸ்பூன் ,பச்சை மிளகாய் மற்றும் ஊற வைத்த கசகசாவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சோம்பு, ஒரு ஸ்பூன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு பொடி பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி புதினாவையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இப்போது அரை ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வேக வைத்த ஆட்டுக்காலையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கினால் மணக்க மணக்க ஆட்டுக்கால் பாயா தயார்.