மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி செய்வது எப்படி.?
வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.
சென்னை :வெண்டைக்காய் கிரேவி வித்தியாசமான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்;
- வெண்டைக்காய் -300 கிராம்
- மிளகாய் தூள் -இரண்டு ஸ்பூன்
- மல்லித்தூள் -அரை ஸ்பூன்
- கரம் மசாலா -1 ஸ்பூன்
- கடலை மாவு- ஒரு ஸ்பூன்
- எண்ணெய் – ஐந்து ஸ்பூன்
- வெங்காயம்- இரண்டு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- அரை ஸ்பூன்
- சீரகம்- ஒரு ஸ்பூன்
- தக்காளி- இரண்டு
- தயிர் -அரை கப்
செய்முறை;
வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து அதை மூன்று துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதில் உப்பு மற்றும் கடலை மாவு, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் வெண்டைக்காயை எண்பது சதவீதம் வதைக்கி கொள்ளவும். பிறகு அதை தனியாக வைத்துவிட்டு அதே கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம் ,வெங்காயம் சேர்த்து தாளித்து அதில் இரண்டு தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
இப்பொழுது உப்பு, மிளகாய் தூள் ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். நன்கு எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அரை கப் தயிர் ஊற்றி கலந்துவிட்டு மிதமான தீயில் மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயையும் சேர்த்து மூன்று நிமிடங்கள் கழித்து கரம் மசாலா ஒரு ஸ்பூன் சேர்த்து சிறிதளவு கொத்தமல்லி இலைகளை தூவி கலந்து விட்டு இறக்கினால் மட்டன் சுவையில் வெண்டைக்காய் கிரேவி தயார்.