கரி குழம்பு போல காளான் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். வீட்டில் மசாலா பொருட்களின் வாசனை வந்து விட்டாலே குழந்தைகள் ஓடிவந்து அம்மாவிடம் இன்று என்ன குழம்பு என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு கறி குழம்பு மேல் விருப்பம் இருக்கும். நீங்கள் கறி குழம்பு வைக்கிறீர்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்ன இன்று கறி குழம்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அந்த அளவுக்கு இதன் வாசனை அனைவரையும் வரவேற்கக் கூடியதாக இருக்கும். ஆனால் எப்போதும் இதற்காக மட்டன் எடுத்து சமைக்கமுடியாது.
எளிமையாக சைவத்திலேயே மட்டன் குழம்பு போல காளான் வைத்து சமைக்க முடியும். நீங்கள் எதிர்பார்க்காத விதமாக அச்சு அசல் கறிக்குழம்பு போலவே காளான் குழம்பு இருக்கும். அந்த அளவுக்கு சுவையான காளான் கிரேவி குழம்பு வைப்பது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இதை ஒருமுறை நீங்கள் சமைத்துக் கொடுத்தால் போதும் குழந்தைகள் நிச்சயமாக மட்டன் என்றே நம்புவார்கள். அந்த அளவுக்கு அசைவம் போல் இருக்கக்கூடிய காளான் குழம்பு எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: காளான் – கால் கிலோ, தக்காளி – 1, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 2, கொத்தமல்லி தலை – இரண்டு கொத்து, தனியா – 3 ஸ்பூன், பூண்டு பல் – 3, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, மிளகு – அரை ஸ்பூன், தேங்காய் – 4 சில்லு, சின்ன வெங்காயம் – 6, எண்ணெய் – 5 ஸ்பூன், பட்டை – சிறிய துண்டு ஒன்று, கிராம்பு – 4, சோம்பு – அரை ஸ்பூன், பெரிய வெங்காயம் – பாதி அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து.
செய்முறை: முதலில் காளானை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு அதனை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல தக்காளி மற்றும் வெங்காயத்தையும் நீளவாக்கில் நறுக்கி வேண்டும். இதனை அடுத்து அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவேண்டும். வானொலி நன்றாக சூடு ஆன பின்பு அதில் தனியா, மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி இவற்றை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். இவற்றை வறுத்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள். இதனை ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் சேர்த்து இதனுடன் ஒரு கொத்து கொத்தமல்லித் தழையும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் மீண்டும் மிக்ஸியில் நான்கு சில்லு தேங்காய் சேர்த்து அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்கு சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களான பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை தாளித்த பின்பு இதில் நீள்வாக்கில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, காளான் இவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்கு வதங்கிய பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஐந்து நிமிடம் வதக்கி விட்டு தண்ணீர் ஊற்றி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். இவை நன்றாக கொதித்து மசாலா வாசனையில் இருந்து பச்சை வாசனை சென்ற பிறகு மீண்டும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து விடுங்கள். இதனுடன் இறுதியாக கொத்தமல்லி தழையும் சேர்த்து ஒரு கொதி வந்த பின்பு இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுலபமான மட்டன் குழம்பு சுவையில் இருக்கக்கூடிய காளான் குழம்பு ரெடி. இவற்றை குழந்தைகள் அசைவம் சாப்பிட நினைக்கும் நாட்களில் காளான் இருந்தால் வீட்டில் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக விருப்பமாக இதனை சாப்பிடுவார்கள்.
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…