சத்தான முருங்கை கீரை பூரி செய்யும் முறை
நம்மில் அதிகமானோர் மைதா அல்லது கோதுமை மாவில் தான் விதவிதமாக பூரி செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் சத்தான முருங்கைக்கீரை பூரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முருங்கைக் கீரையை தனித்தனியாக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு, சுத்தம் செய்த முருங்கைக்கீரை, அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்ற வேண்டும்.
பின் எல்லாவற்றையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். சப்பாத்திக்கு பிசைவது போல பிசையாமல், சிறிது கெட்டியாக பிசைய வேண்டும். பின் இட்லி துணியை நீரில் நனைத்து பிசைந்த மாவினை அரை மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்பு மாவை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து, பூரியாக தட்டி, வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், எண்ணெயில் ஒவ்வொன்றாகப் போட்டு பொரித்து எடுக்கவேண்டும். இப்போது சத்தான முருங்கைக் கீரை பூரி தயார்.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…