மோர் களி ரெசிபி செய்வது எப்படி ?வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

பாரம்பரியமிக்க மோர் களி  செய்வது எப்படி என பார்க்கலாம் ..

mor kali (1)

சென்னை :பாரம்பரியமிக்க மோர் களி  செய்வது எப்படி என பார்க்கலாம் ..

தேவையான பொருள்கள்:

  • தயிர்= இரண்டு ஸ்பூன்
  • மோர்= மூன்று கப்
  • அரிசி மாவு =200 கிராம்
  • பெருங்காயம் =ஒரு ஸ்பூன்
  • மோர் =மிளகாய் 6
  • நல்லெண்ணெய்= தேவையான அளவு
  • நெய் =ஆறு ஸ்பூன்
  • கடுகு உளுந்து =ஒரு ஸ்பூன்

mor milakai (1)

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிர் ,அரிசி மாவு ,மோர் மற்றும் ஒரு கப் தண்ணீர், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மற்றொரு புறம் அடி கனமான பாத்திரத்தை சூடாக்கி நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .இப்போது கலந்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தக் கலவை நன்கு கெட்டியாகி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும். இப்போது அல்வா பதத்திற்கு வந்தவுடன் தனியாக ஒரு பாத்திரத்தில்  இரண்டு ஸ்பூன் எண்ணெயில் மோர் மிளகாயை தாளித்துக் கொள்ளவும். தாளித்த மிளகாயை தனியாக எடுத்து    இடித்துக் கொள்ளவும் .

butter milk (1)

தாளித்த எண்ணையை அடுப்பில் இருக்கும் மோர் களியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். மீண்டும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு இடித்து  வைத்துள்ள மோர் மிளகாயையும் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளற வேண்டும் .பிறகு அதை ஒரு ட்ரேவிற்கு மாற்றி சமப்படுத்தி மேலாக எண்ணெய்  தடவி அரை மணி நேரம் ஆற வைத்து விட வேண்டும் .அரை மணி நேரம் கழித்து அதை பீஸ் ஆக நறுக்கி  எடுத்து கொள்ள வேண்டும் .ஒரு தோசை தவாவில் தேவையான அளவு நெய் ஊற்றி அதில் இந்த பிஸ்களை  சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பாரம்பரியமித்த மோர்களி  தயாராகிவிடும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்