மைதா மாவில் கலக்கலான கல கலா செய்வது எப்படி?
மைதாவை வைத்து வித்தியாசமான முறையில் கலகலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
பொதுவாக நாம் மைதாவை வைத்து ரொட்டி, பரோட்டா போன்ற பொருட்களை தான் செய்வதுண்டு. ஆனால் மைதாவை வைத்து வித்தியாசமான முறையில் கலகலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- மைதா மாவு – கால் கப்
- ரவை – கால் கப்
- வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – தேவைக்கேற்ப
- எண்ணெய் -தேவைக்கேற்ப
- சர்க்கரை – 150 கிராம்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மைதா, ரவை, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.
அதன் பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, பூரி கட்டையில் வட்டமாகத் தேய்த்து, அதன்பின் கத்தியால் சதுர வடிவ துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதை வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டிய துண்டுகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். இப்பொது சுவையான கல கலா தயார்.