கந்த சஷ்டி விரதத்தின் ஸ்பெஷல் ரெசிபியான தினை மாவு லட்டு செய்யும் முறை..!
முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
சென்னை –முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த உணவாக தினைமாவும் தேனும் சொல்லப்படுகிறது. இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு நெய்வேத்தியமாக தினை மாவு லட்டு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- தினை = ஒரு கப்
- தேன்= தேவையான அளவு
- நெய் = இரண்டு ஸ்பூன்
- ஏலக்காய்= 3
- சுக்கு =அரை இன்ச் அளவு
- முந்திரி= சிறிதளவு
- உலர் திராட்சை =சிறிதளவு
செய்முறை;
தினை அரிசியை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு அதை வெயிலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள் .பின் அதனுடன் ஏலக்காய் மற்றும் சுக்கு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தை சூடாக்கி நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு மற்றும் உலர் திராட்சை சேர்த்து வறுத்து அதனுடன் தினைமாவையும் சேர்த்து வறுக்க வேண்டும் .
பிறகு ஆற வைத்துக் கொண்டு .அதனுடன் சிறிது சிறிதாக தேன் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும் லட்டு பதத்திற்கு வரும் வரை தேனூற்றி உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும் .இப்போது தேனும் தினை மாவும் கலந்த லட்டு தயார்.