கிராமத்து ஸ்டைலில் மாங்கொட்டை ரசம் செய்வது எப்படி?
Rasam recipe-கிராமத்து சுவையில் மாங்கொட்டை ரசம் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- மாங்கொட்டைகள்= மூன்று
- துவரம் பருப்பு =50 கிராம்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- தக்காளி =2
- சின்ன வெங்காயம் =10
- பச்சை மிளகாய்= 2
- வரமிளகாய்= 2
- பூண்டு= 4 பள்ளு
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- புளி = நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் =3 ஸ்பூன்
- வெந்தயம் =அரை ஸ்பூன்
செய்முறை;
மூன்று மாங்கொட்டைகளை காய வைத்து கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்போது குக்கரில் துவரம் பருப்பு, மாங்கொட்டைகள் ,அரை ஸ்பூன் சீரகம் ,அரை ஸ்பூன் மஞ்சள் தூள், தக்காளி ,வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும் . இப்போது மிளகு ,சீரகம் மற்றும் பூண்டை இடித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் மற்றும் கடுகு சேர்த்து பொரிந்ததும் கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் கிள்ளி சேர்க்கவும் .இப்போது குக்கரில் உள்ள பருப்பு மற்றும் மாங்கோட்டை தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும் .அதனுடன் சிறிதளவு புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து இடித்து வைத்துள்ள மிளகு சீரத்தையும் சேர்த்து நுரை வரும்வரை விட்டு இறக்கினால் மாங்கொட்டை ரசம் தயார்.