கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!
கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- காய்ந்த மிளகாய்= 4
- இஞ்சி =இரண்டு துண்டு
- புளி= நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் =ஒரு ஸ்பூன்
- தேங்காய் =ஒரு கப்
- சின்ன வெங்காயம்= 15
- தேங்காய் எண்ணெய்= தேவையான அளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் வரமிளகாய், இஞ்சி, புளி ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சின்ன வெங்காயம், கருவேப்பிலை ,துருவிய தேங்காய் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ,ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும் .தண்ணீர் சேர்க்கக்கூடாது. அரைத்த பிறகு இவற்றை உருண்டைகளாக பிடித்து அதன் மேலே லேசாக தேங்காய் தடவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.